குழந்தை பாலியல் குற்றவாளிகளுக்கான நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான , (Andrew Mountbatten Windsor) ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சரின் நீண்டகால நட்பு தொடர்பாக நேர்காணல் ஒன்றினை வழங்குமாறு அமெரிக்க காங்கிரஸ் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதேவேளை, மேற்பார்வை மற்றும் அரசாங்க சீர்திருத்தக் குழு, மறைந்த நிதியாளரின் பாலியல் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஆவணங்களில் ஆண்ட்ரூவுக்கு மசாஜ் போன்ற நிதிப் பதிவுகள் காணப்பட்ட நிலையில் அவை பல கேள்விகளை எழுப்பிவருகிறது.
இந்நிலையில் எப்ஸ்டீனின் சக நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் அடையாளங்களைக் கண்டறியவும், அவரது குற்றவியல் நடவடிக்கைகளின் முழு அளவைப் புரிந்துகொள்ளவும் உதவி புரியுமாறு விசரணைக்குழு ஆண்ட்ருவுக்கு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, குழுவுடன் நேர்காணலுக்கு அமர்ந்து குழுவின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காங்கிரஸ் அன்ரோவிடம் கோரியுள்ளது.














