இங்கிலாந்தில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து குடியிருப்பு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக ஜூனியர் மருத்துவர்கள் என்று அழைக்கப்பட்ட குடியிருப்பு மருத்துவர்கள் இந்த வாரம் தங்கள் சமீபத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் கடந்த ஆண்டு பதவிகளுக்கு வந்த நிலையில் ஏற்பட்ட ஊதிய ஒப்பந்தம் தற்போதுவரை நீண்ட காலமாக பிரச்சினையாக காணப்டுவதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, மருத்துவர்களின் ஊதியம் 2008 உடன் ஒப்பிடும்போது இன்னும் “குறைந்துள்ளது” என்றும், அதை மீட்டெடுப்பதற்கான “பயணத்தை” அரசாங்கம் முடிக்கத் தவறிவிட்டது என்றும் இங்கிலாந்து மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், புதிய சுற்று குடியிருப்பு மருத்துவர் வெளிநடப்புகளையும் இங்கிலாந்து மருத்துவ சங்கம் (BMA) ஆதரித்துவருகிறது.
இந்நிலையில், இந்த சர்ச்சை பல ஆண்டுகளாக ஊதியக் குறைப்பில் வேரூன்றி உள்ளது எனவும் இது குடியிருப்பு மருத்துவர்களை மற்ற பொதுத்துறை ஊழியர்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் வைத்துள்ளது எனவும்இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் (Tom Dolphin ) டாம் டால்பின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சில சம்பள உயர்வுகள் இருந்ததாகவும் அவை ஓரளவுக்கு முழுமையாக இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.














