நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிகரித்தளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
கடும் மழை, பலத்த காற்று மற்றும் இடி மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்ளை அறிவுறுத்தியுள்ளது.















