2025 ஒக்டோபர் மாத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் வருடாந்திர பணவீக்கம் கடந்த 05 மாதங்களில் முதல் முறையாக குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களை விட 3.8 சதவிகிதம் என்ற உச்சத்தில் இருந்து குறைந்துள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த மாத பணவீக்க விகிதம் இன்னும் அரசாங்கத்தின் 2 சதவிகித இலக்கை விட அதிகமாக உள்ளது.
அதேநேரம் இங்கிலாந்து வங்கியால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் சேவை விலை பணவீக்கம் 2025 செப்டம்பரில் 4.7% ஆக இருந்தது, அது கடந்த மாதம் ஒக்டோபரில் 4.5% ஆகக் குறைந்துள்ளது.
இது பொருளாதார வல்லுநர்களின் சராசரி எதிர்பார்ப்பான 4.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.
எதிர்வரும் டிசம்பரில் 5.3 சதவீதம் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் உணவு மற்றும் பான பணவீக்கம் கடந்த ஒக்டோபரில் 4.9 சதவிகிதமாக இருந்தது.
இதேவேளை, நவம்பர் 26 அன்று வெளியிடப்படும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதாக இங்கிலாந்தின் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதியளித்துள்ளார்.
இதில் பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான பாதையை எளிதாக்குவது ஆகியவையும் அடங்கும்.


















