போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் படகில் சுமார் 15 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்களும் படகையும் இன்று (20) பிற்பகல் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளன.














