இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரின் முன்னாள் துணைவரான ஏஞ்சலா ரேய்னரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ரேய்னர் சமூக இயக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் என்றும் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரேய்னர் தன் இரண்டாவது வீட்டின் முத்திரைத் தீர்வை தொடர்பான வரி ஏய்ப்பு சர்ச்சைக்குப் பின்னர் தனது பதவிகளை இராஜினாமா செய்திருந்தார், ஆனால் அவர் நேர்மையுடன் செயல்பட்டதாக ஒரு அரசாங்க ஒழுங்குமுறை விசாரணை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.
ஸ்டார்மர் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே அவர் மீண்டும் பொறுப்பேற்பதை முற்றிலும் விரும்புவதாகவும், ரேய்னர் தற்போது ஒரு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கூட, அவர் அரசியலிலிருந்து விலகிவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.














