நியூகாஸில் ஒரு தம்பதியினர் மீதான கொலை முயற்சி தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் (Elswick) எல்ஸ்விக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 60 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில், ஐந்து பேர் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரிலும், ஒருவர் திட்டம் தீட்டியவர் எனும் சந்தேகத்தின் பேரிலும், மற்ற இருவர் குற்றவாளிக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டனர்.
20 முதல் 60 வயதுக்குற்பட்டவர்களையே பொலிஸார் கைது செய்யாட்டுள்ளனர்.
இதேவேளை, பலத்த காயம் அடைந்த குறித்த பெண் இன்னும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் அதேசமயம் ஆணின் நிலை சீராக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வு அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து சமூகங்களுக்கு உறுதி அளித்ததோடு, சந்தேகேநபர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் காரினை பார்த்தவர்கள் எவரேனும் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.














