நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு இன்று (25) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், நீர்த்தேக்கத்திற்குக் கீழ் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்தத் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மலைகள், மண்மேடுகள் அருகே வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.














