• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இலங்கை – நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய ஒத்துழைப்பை கோர வேண்டும் – கஜேந்திரகுமார் MP கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு
இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஒத்துழைப்பை கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அனர்த்த நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த பேருந்து கல்லோயா பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது.

அங்கு மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல புதுக்குடியிருப்பு வைத்தியசாலை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து இன்னொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கூட வசதி இல்லை. அவசர நோயாளர்களை வெளியில் கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை இருந்தும் கூட அதனை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

அதே போன்று செட்டிகுளம் பகுதியிலும் அதே பிரச்சினை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சில இடங்களில் உயிருக்கு போராடும் சூழலில் அந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணம் இலங்கையினுடைய விமானப்படைக்கும் கடற்படைக்கும் இராணுவத்திற்கும் உதவி கேட்டும் கூட அவர்களால் அந்த உதவியை செய்ய முடியாத ஒரு வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.

செட்டிகுளம் பகுதியை எடுத்துக்கொண்டால் தண்ணீர் வேகத்திற்கு கடற்படை படகுகளை கொண்டு அந்த இடங்களை அடைய முடியாத நிலை உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த படகுகளும் அடிபட்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பததாக கூறப்படுகிறது. விமானம் ஊடாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு உதவி செய்வதென்றால் கூட விமானங்களை தற்போதைய காலநிலையில் பறக்க முடியாத நிலை காணப்படுகிறது.

காலநிலை சீரான பின்னரே இதனை செய்ய முடியும் என கூறுகிறார்கள். நிலமைகள் முன்னேறும் வரைக்கும் இருந்தால் அந்த உதவிகள் தேவைப்படாது. அதற்கு முதல் அந்த மக்களை ஏதோவொரு வகையில் நாங்கள் காப்பாற்ற வேண்டும்.

இலங்கை கடற்படையினுடைய 75வது ஆண்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் இங்கு வந்திருக்கிறது.

தங்களுடைய வளங்களை இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு முழுமையாக ஈடுபடுத்துவதற்கு தயார் என இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் உள்ள கடற்படை விமானப்படையின் பலத்தை இலங்கையின் கடற்படைக்கும் விமானப்படைக்கும் உள்ள பலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

தீர்க்க முடியாத விடயங்களை கூட சுகமாக தீர்க்கக்கூடிய வல்லமை இந்திய கடற்படைக்கும் விமானப்படைக்கும் இருக்கும். இந்த கோரிக்கை அவசரமாக இந்திய தூதரகம் ஊடாக வலியுறுத்துகிறோம்.

வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்காமல் இருப்பதற்கான பிரதான காரணம் முப்படைகளினுடைய வளப் பற்றாக்குறை என்பதே உண்மை என இன்றைய கூட்டத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டது. அரச தரப்பு இந்த விடயத்தில் அக்கறை காட்டும் நிலையில் இல்லை.

நிதி உதவிகள் இருந்தாலும் மக்களின் உயிர்களை காப்பாற்றுவது வேறு விடயம்.

இடம்பெயர்ந்து முகாமில் இருக்கும்போது உதவிகளை செய்வது வேறு. ஆனால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழலில் நாங்கள் இதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதை அவசரமாக செய்ய வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திடம் இந்திய தூதரகத்திடமும் ஒரு கோரிக்கையை விடுகின்றோம். தயவு செய்து இந்த நிலைமை விளங்கிக் கொண்டு அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி இந்த பிரச்சனையை தீர்க்க ஆலோசனை பெற வேண்டும். இந்தியா உதவ வேண்டும் என்பது எங்களுடைய வலியுறுத்தல்.

இந்திய தூதரகம் வடக்கில் இருக்கக்கூடிய நிலைமைகளை ஏதோவொரு வகையில் தீர்த்து வைப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க இயன்றளவு பங்களிப்பை செய்வதற்கு அவசரமாக முன்வர வேண்டும்.

எங்கள் பார்வையில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் நாளைக்கு காலையில் காப்பாற்றபடாவிட்டால் மறுநாள் காப்பாற்றலாமோ என்ற கேள்விகளும் எழும்.

அரசு தரப்பினுடைய அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை இந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்கள்

சுய கௌரவத்தை பார்த்துக் கொண்டு வராமல் அரசாங்கம் உலகத்திலேயே மிகப் பலமான ஒரு கடற்படையும் விமானப் படையையும் கொண்டு நாட்டினுடைய அனர்த்தம் இருக்கிற இடத்தில் அவர்களும் முழுமையாக உதவி செய்ய தயார் என்று கூறிய நேரத்தில் அந்த உதவியை பெற வேண்டும் என அவசரமாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியா தொடர்பான அரசாங்கத்தின் பழைய சிந்தனைகளை வைத்துக்கொண்டு செயற்பட முடியாது. மக்களை காப்பாற்றுவதாக இருந்தால் அவசரமாக இந்த விடயத்தை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இது சவாலாக மாறிக்கொள்கிறது – என்றார்.

Related

Tags: KAJENTHIRAKUMAR MPsrilanka new
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராஜாங்கனை கிரிபாவ பகுதி மற்றும் கலா ஓயா பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

Next Post

சீரற்ற காலநிலையினால் யாழில் 7513 பேர் பாதிப்பு!

Related Posts

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
SriLanka Police

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!
இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

2026-05-25
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!
இலங்கை

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

2026-05-25
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!
இலங்கை

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!
இலங்கை

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

2026-05-24
Next Post
சீரற்ற காலநிலையினால் யாழில்  7513 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் யாழில் 7513 பேர் பாதிப்பு!

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை!

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பொது மக்களுக்கு பதுளை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

வெலிமடை - கெப்பெட்டிப்பொல பகுதியில் மண்சரிவு- இதுவரை இருவரின் சடலங்கள் மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

0
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

0
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.