நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 03ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கடலில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் மீட்டு , அவற்றை சோதனையிட்டனர்.
சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பன அந்த பொதியில் காணப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்கள் , கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது , பொதிகளை கடலுக்குள் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை , மீட்கப்பட்ட பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.













