ஒரு சிறிய படகில் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்த ஈராக்கிலிருந்து வந்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரெப்வார் ஹமாத் என்ற ஈராக்கியர் சட்டவிரோதமாக ஒரு சிறு படகு மூலம் இங்கிலாந்திற்குள் மீண்டும் நுழைந்ததற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர் முதலில் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியைப் பெற்றிருந்தாலும், 2019 ஆம் ஆண்டில் இத்தாலியில் பயங்கரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு, தண்டனையை அனுபவிக்க நாடுகடத்தப்பட்டார்.
இத்தாலியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இங்கிலாந்திற்குள் நுழைய விசா கோரி அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால், அவர் சட்டவிரோத பயண ஏற்பாட்டாளர்களுக்கு பணம் செலுத்தி ஒரு படகில் பயணித்தபோது டோவர் அருகே இடைமறிக்கப்பட்டார்.
இதை அடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, காண்டர்பரி கிரவுன் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகளும் மூன்று மாதங்களும் சிறைத்தண்டனை விதித்தது.
பயங்கரவாத வரலாற்றைக் கொண்ட இவர், குடியேற்ற விதிகளை அப்பட்டமாக புறக்கணித்து வந்ததாலேயே அதிகபட்ச தண்டனையைப் பெற வேண்டும் என்று கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் (CPS) நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டது.













