• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கண்டி மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

கண்டி மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/06
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் எனவும்
இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் எனவும் பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான காணிகளில் முழுமையாக பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அனுமதியற்ற நிரமாணிப்புகளுக்கு இனிமேல் இடமில்லை எனவும்
பாதிக்கப்பட்ட மத்திய மலைநாட்டை சீர்செய்ய ஒரு நீண்டகாலத் திட்டம் தேவை எனவும்
அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினர் செய்து வரும் பணிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றது.

இதன்போது அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.

வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதே வேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

Related

Tags: anurakumara disanayakaKandysrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!

Next Post

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அதிகாலையில் பாரிய விபத்து – ஐவர் படுகாயம்!

Related Posts

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

2026-02-04
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!
இலங்கை

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

2026-02-04
இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!
இலங்கை

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

2026-02-04
சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!
கிளிநொச்சி

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

2026-02-04
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு.
அம்பாறை

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு.

2026-02-04
நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
Next Post
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அதிகாலையில் பாரிய விபத்து – ஐவர் படுகாயம்!

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அதிகாலையில் பாரிய விபத்து - ஐவர் படுகாயம்!

தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

0
ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

0
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

0
சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

இணைய விளையாட்டிற்கு அடிமையான சிறுமிகள் உயிரிழப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.