நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை இலங்கை விமானப்படையினர் வான்வழி மற்றும் தரைவழி ஊடக விநியோகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றும் ( 07) திகன, பலவிய, அஸ்கிரிய, அம்பலியத்த, நுவரெலியா, கோனபொல, மீமுரே, உடுகும்புர, மலகொல்ல மற்றும் உடுதும்பர ஆகிய இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை விமானப்படை பெல் 412, பெல் 212, MI17 மற்றும் Y12 விமானங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன.














