கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என மீண்டும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகள் விதித்தார் ட்ரம்ப்.
ஆனால், உரம் மீதான வரி தொடர்பில் அமெரிக்க தரப்பில் எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, உரம் மீதான வரிகளை மட்டும் 10 சதவிகிதமாகக் குறைத்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் வரி விதிப்புகளால் தாங்கள் உரம் வாங்க அதிகம் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இருதரப்புமே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, அந்த நேரத்தில், இனி பொட்டாஷ் உரத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது. அதை வைத்தே அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பில் பேரம் பேசவேண்டும் என ஒரு யோசனை முன்வைத்திருந்தார்.
ஆனால், அதற்கு கனடா தரப்பிலேயே எதிர்ப்பு உருவானது.
இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என மீண்டும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
உள்நாட்டு உற்பத்தியை ஆதரிக்கும் வகையில், தேவையானால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
முன்பின் யோசிக்காமல் இப்படி ஒரு மிரட்டலை விடுத்துள்ளார் ட்ரம்ப். விடயம் என்னவென்றால், அமெரிக்க விவசாயிகள் பலர் உரத்துக்காக கனடாவையே நம்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
















