வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உலகில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும், பணமாக்கவும் அமெரிக்கா எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரையறுக்கப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.
அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை தனது “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் (£750,000) செலுத்தக்கூடிய செல்வந்த வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்களை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இது வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.
ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை, விரைவான நாடுகடத்தல்கள் முதல் சட்டப்பூர்வ பாதைகளை கட்டுப்படுத்துவது வரை, தீவிரப்படுத்தி வரும் தருணத்தில் இந்த வெளியீடு வந்துள்ளது.
தி கார்டியன் செய்தித்தாளின் கூற்றுப்படி, ட்ரம்ப் இந்த திட்டத்தை ஒரு பெரிய பொருளாதார வெற்றியாகக் பார்க்கிறார், இது “பல பில்லியன் டொலர்களை ” திரட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்பின் நிர்வாகம் குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பரந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் இருந்த லட்சக்கணக்கான மக்களை நாடு கடத்தியுள்ளது மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















