இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸுக்கு சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, டுபாயில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து வரும் ILT20 போட்டியில் பங்கேற்று வந்த மெண்டிஸுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.
மேலும், அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
இதன் விளைவாக, அவர் ILT20 சீசனின் எஞ்சிய ஆட்டங்களை குசல் மெண்டீஸ் இழப்பார்.
அவரது அணி விரைவில் மாற்று வீரரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















