சப்புகஸ்கந்த வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தேகநபரை நேரில் பார்வையிட்டதன் பின்னர் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சந்தேகநபர் 02 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.















