மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதிகப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் (TVTC) 2026ம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
16 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட பாடசாலை கல்வியினை நிறைவு செய்து இளைஞர், யுவதிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.














