டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளார்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைபிரதிநிதி டக்காபுமி கடோனோ ஆகியோருக்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது
பேரிடர் நிலைமையின் பின்னர் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிநிலைமை தொடர்பாகவும் மக்களுக்கான நிவாரணங்கள் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைபிரதிநிதியிடம் தெளிவுபடுத்தியிருந்தார்
இதேவேளை கடினமான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்















