ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூதர்களின் ‘ஹனுக்கா’ பண்டிகையின் தொடக்க கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன்.
மேலும் பலர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.
ஹனுக்கா என்ற யூத திருவிழாவையொட்டி, போண்டி கடற்கரைக்கு நேற்று சுமார் 1,000 யூதர்கள் வந்திருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென்று கடற்கரையில் நின்றிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
துப்பாக்கி சூடு சம்பவத்தைப் பார்த்து பீதியடைந்த பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடினார்கள்.
இந்த தாக்குதலில் முதல் கட்டமாக 11 பேர் உயிரிழந்ததுடன் 2 பொலிஸார் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 வயது சிறுமி உள்ளடங்களாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு வாலிபரை பொதுமக்களில் ஒருவர் தாக்கி கீழே தள்ளி துப்பாக்கியை பறித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தந்தை–மகன் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் தந்தையின் பெயர் சஜித் அக்ரம் மகன் பெயர் நவீத் அக்ரம்;.
ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் பொலீஸ் கமிஷனர் லேன்யன் இவ்வாறு கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை–மகன் இருவருக்கும் ஆஸ்திரேலியாவுடன் நீண்ட காலமாக தொடர்பு உள்ளது. சஜித் அக்ரம் 2015-ம் ஆண்டு முதல் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இருவரின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சஜித் அக்ரம் ஒரு துப்பாக்கி கிளப்பில் உறுப்பினராக இருந்தார்.
சட்டப்படி துப்பாக்கி உரிமம் பெற அவருக்கு தகுதி இருந்தது. அவரிடம ‘ஏ’ வகை உரிமம் இருந்தது.
அதனால் அவர் நீண்ட துப்பாக்கிகளை வைத்திருந்தார்.
துப்பாக்கி உரிமத்தைப் பொறுத்தவரை, ஒரு நபர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்க தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த துப்பாக்கி பதிவகம் அனைத்து விண்ணப்பங்களையும் முழுமையாக ஆய்வு செய்கிறது
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வந்த காரில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போண்டி கடற்கரை தாக்குதலை தீவிரவாத சம்பவமாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளத என தெரிவித்தார்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், 8 நாட்கள் நடைபெறும் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் போது நடந்துள்ளது.
இந்த பண்டிகையின் முதல் நாள் இரவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹனுக்கா பண்டிகை தொடக்க நிகழ்வுக்காக சுமார் 1,000 பேர் கடற்கரையில் கூடியிருந்தபோது, உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த நவீத் அக்ரம் குணமடைந்த பிறகு, அவரிடமும் விசாரணை நடத்த பொலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் வலைதள்ததில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

















