டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் காலை 7 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு கடுமையான வரம்பிற்குக் கீழே இருந்தது.
சில பகுதிகள் மோசமான மண்டலத்தில் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் பலத்த காற்று மற்றும் மெல்லிய மூடுபனி மாசுபாட்டின் அளவை கடுமையான வகையிலிருந்து வெளியே தள்ள உதவியது.
இதனால் 354 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு 24 மணி நேரத்தில் 329 புள்ளிகளாக குறைந்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, 0 முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு ‘நல்லது’ என்றும், 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’ என்றும், 101 முதல் 200 வரை ‘மிதமானது’ என்றும், 201 முதல் 300 வரை ‘மோசம்’ என்றும், 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமானது’ என்றும், 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்றும் கருதப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக தலைநகரையே ஸ்தம்பிக்க வைத்த அடர்த்தியான புகைமூட்டம் வீதிகளை மூடியது, விமானம் மற்றும் போக்குவரத்து சேவைகளை பெருமளவில் பாதித்தது மற்றும் பல வீதி விபத்துகளுக்கு வழிவகுத்தது.


















