பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாக, சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, அதிலிருந்து அவர்களை விலக்கி வைக்க ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கும் திட்டம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையின் தீவிரமயமாக்கலைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் இந்தத் திட்டங்கள் இந்த ஆண்டு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் இன்று வெளியிடப்பட்டவுள்ளன.
பெண் வெறுப்பின் ஆரம்ப வேர்களைக் கையாள்வதன் மூலம், இளைஞர்கள் வன்முறையாளர்களாக மாறுவதைத் இந்த திட்டங்கள் மூலமாக தடுக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.
புதிய திட்டங்களின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான சிறுவர்களின் தப்பான எண்ணங்களை கைவிடுவதற்கான படிப்புகள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் இன்று இந்த திட்டத்திற்காக 20 மில்லியன் யூரோ தொகுப்பை முறையாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 16 மில்லியன் பவுண்ட்ஸ் வரி செலுத்துவோரிடமிருந்தும் 4 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாளர்கள் மற்றும் பங்காளர்களிடமிருந்தும் வருகிறது.















