ஜம்முவின் பிஷ்னா பகுதிக்கு அருகிலுள்ள ரிங் சாலையில் நேற்றிரவு சுற்றுலா பேருந்து ஒன்று தடுப்பு சுவருடன் மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரக்வால் அக்னூர் (Prgwal Akhnoor) என்ற தனியார் பாடசாலை மாணவர்ளுடன் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள தடுப்புச் சுவருடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்த உடனேயே பொலிஸாரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று விரைவான மீட்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
விபத்தில் காயமடைந்த மாணவர்களில் சிலர் ஜம்மு எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், ஏனையவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.















