இலங்கை மற்றும் இந்திய அணிக்கழூக்கிடையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச டி20 போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகளை கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது.
இதுவரை இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் இந்தியா 22 – 5 என்ற வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் அதன் ஆதிக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஸ்ம்ரித்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் 19 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸம் 2ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஷபாலி வர்மா 34 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.





















