டோக்கியோவின் மினாடோ-குவில் உள்ள ஷினகாவா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள யோஷினோயா உணவகத்திற்கு வெளியே தனது கழுத்தில் பயன்பாட்டு கத்தியை வைத்து அழுத்தியதற்காக இலங்கையர் ஒருவர் டிசம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனால், குறித்த நபரின் கை மற்றும் கழுத்தில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன.
ஆனால் அவர் சுயநினைவுடன் இருந்தார்.
பொலிஸார் உடனடியாக அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கத்தியை கீழே போடும்படி வற்புறுத்தினர்.
அவரது இணக்கத்தை அடுத்து, ஜப்பானின் துப்பாக்கிகள் மற்றும் வாள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் அருகில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.













