ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
ஆரம்ப வீரர்களாக டிராவிஸ் ஹெட், ஜக் வெதரால்ட் களம் இறங்கினர். இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. ஹெட் 12 ஓட்டங்களிலும் வெதரால்ட் 10 ஓட்டங்களிலும், லபுஸ்சேன் 6 ஓட்டங்களிலும் சுமித் 9 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலிய அணி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு கவாஜா 29 ஓட்டங்களிலும்;, அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 91 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது.
அதன்பின் கேமரூன் கிரீன்- மைக்கேல் நெசர் ஜோடி நிதானமாக விளையாடியது. அந்த அணி 36-வது ஓவரில் 100 ஓட்டங்களை பெற்றது. கேரூமன் கிரீன் 17 ஓட்டங்களிலும்;, அடுத்து களம் வந்த மிட்செல் ஸ்டார்க் ஒரு ஓட்டத்துடனும்,ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலியா அணி 45.2 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.
அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட்டினை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அவுஸ்ரேலிய பந்துவீச்சிற்கு தாக்குபிடிக்க முடியமால் அவர்களைவ விட மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
முன்வரிசையில் ஹரி புருக் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கக பின்வரிசையில் கஸ் அட்கின்சன் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்த அணி முதல் நாளிளேயே 110 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.
பந்துவீச்சல் மிட்ச்சல் நசார் 4 விக்கட்டுக்களையும் போலன்ட் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
முதல் டெஸ்ட போட்டிற்கு பிறகு மீண்டும் 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அவுஸ்ரேலிய அணிகள் மோசமான சாதனையை பதிவு செய்தார்கள்.
ஒரே நாளில் 20 விக்கட்டுக்களை பறிகொடுத்து இதுவரை இல்லாத ஒரு சாதனையை இரு அணிகளும் படைத்தமை குறிப்பிடதக்கது.






















