‘ஐஸ்’ என பொதுவாக அழைக்கப்படும் ‘படிக மெத்தம்பேட்டமைன்’ என்ற போதைப்பொருளின் பயன்பாடு இலங்கையில் வெகுவாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் ‘ஐஸ்’ போதைக்கு அடிமையான 60,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாக NDDCB இன் உதவி ஆராய்ச்சி பணிப்பாளர் தாமர தர்ஷன குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக கைது செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் ஒப்பிடும்போது, ஐஸ் போதைப்பொருளின் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளமை புள்ளிவிபரங்கள் வெளிக்காட்டுகின்றன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் போதைப்பொருள் பாவனை அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறுனார்.

















