இலங்கைக்கான, நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படுகின்ற நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
எனினும் அதற்கு அனுமதியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கடந்த 15ஆம் திகதி கூடவிருந்தது.
ஆனால் டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















