நாகொடை பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையின் 14 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொஹுவல, சரணங்கர வீதியின் போதியவத்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














