வடக்கு கிழக்கில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பௌத்த துறவிகளே காரணமாக அமைந்துள்ளதாகவும் எனவே மறுக்கப்படுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ச்சியான போராட்டங்களே அவசியம் என வலியுறுத்தின் இன்று வவுனியாவில் ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்களை கைதுசெய்தமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.















