முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைபேசி மூலம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்னாள் ஜனாதிபதிக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வாழ்த்துப் பரிமாற்றம் புத்தாண்டில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
















