2026 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது.
இதன்போது, பங்களாதேஷ் நான்கு டெஸ்ட் போட்டிகள், 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளை நடத்தும்.
ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் 2026 மார்ச் மாதத்தில் உள்ளூர் சீசன் தொடங்கும்.
பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பங்களாதேஷுக்கு பயணிக்கும்.
அத்துடன், மே மாதத்தில் பாகிஸ்தான் மீண்டும் இரண்டு டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்ளும்.
இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை (WTC) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
நியூசிலாந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை உள்ளடக்கிய முழு வெள்ளை பந்து சுற்றுப்பயணத்திற்காக பங்களாதேஷுக்கு செல்லும்.
அவுஸ்திரேலியா ஜூன் மாதத்திலும், இந்தியா ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரிலும் பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்ளும்.
நியூசிலாந்தைப் போலவே, அவர்களும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவார்கள்.
பங்களாதேஷ் அணியின் 2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் சீசன் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் WTC இன் ஒரு பகுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர்களுடன் முடிவடையும்.
சர்வதேச போட்டிகளுக்கு மேலதிகமாக, இலங்கை ஏ அணி மே மாதம் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு நான்கு நாள் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் என்பதும் குறிப்படத்தக்கது.

















