முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோருக்கு எதிராக 9 வரை நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

















