2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சைபரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகளை நடாத்துதல், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துதல், மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல் என்பன இவ்வாறு தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவரேனும் ஒருவர் அல்லது நிறுவனமொன்று இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படுவார்களாயின், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவார்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
















