கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (06) காலை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பதுளை நீதவான் மே 05 ஆம் திகதி அதை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி பதுளை தலைமையக பொலிஸாரால் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.
பின்னர், அதே நாளில் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பொதுத் தேர்தல் பிரச்சாரக் காலத்தின் இறுதி நாளில் பதுளை நகரில் நடத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத ஊர்வலம் தொடர்பான குற்றச்சாட்டுகள், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டன.
















