இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (06) நுவரெலியா பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அங்கு வெப்ப நிலை 14.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
இன்று அதிகாலை நேரத்தில் வானிலை ஆய்வு நிலையத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்கள் தெரிவித்த தரவுகளின் அடிப்படையில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் (05) அம்பாறையின் லாஹுகலவில் 173.5 மி.மீ. அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

















