ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை அணி, இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தூரை தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகக் கொண்டுவர உள்ளது.
2024 வரை இந்தியா அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றிய ரத்தோர், தற்போது ஐபிஎல் உரிமையாளரான ராஜஸ்தான் ரோயல்ஸின் உதவி பயிற்சியாளராக உள்ளார்.
இந்த நிலையில் அவர் ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் இங்கிலாந்து தொடரின் போது ரத்தோர் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும், டி20 உலகக் கிண்ணம் வரை அவர் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும், உலகளாவிய போட்டிக்கு முன்னதாக இலங்கையின் பேட்டிங் ஆயத்தங்களை வலுப்படுத்துவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.



















