பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம் தர அதிகாரியான யூ.எல்.எம்.சாஜித் அவர்கள் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகாரபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
முற்றிலும் தமிழ் பாடசாலைகளைக் கொண்டுள்ள பட்டிருப்பு வலயத்தில், நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஒரு முஸ்லிம் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை, கல்வி நிர்வாகத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றகரமான ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது.
திறமை, தகுதி மற்றும் நிர்வாக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இன மற்றும் மொழி வேறுபாடுகளைத் தாண்டி இந்த நியமனம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை, இன்றைய அரசின் “ஒன்றே நாடு – எல்லோரும் சமம்” என்ற கொள்கைக்கு ஏற்ப, முன்மாதிரியான ஒரு தீர்மானமாக அமைந்துள்ளதாக கல்வி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
புதிய பொறுப்பில் கடமையாற்றத் தொடங்கிய யூ.எல்.எம்.சாஜித் அவர்களின் சேவை, பட்டிருப்பு வலயத்தின் கல்வி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவரது எதிர்கால பணிகளுக்கு கல்வி சமூகத்தினரின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.


















