இங்கிலாந்தின் (Norfolk,) நார்ஃபோக் பகுதியில் உள்ள (Hemsby) ஹெம்ஸ்பி கடற்கரை கிராமத்தில் கடும் அரிப்பு காரணமாக வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோரெட்டி புயலின் தாக்கத்தால் கடலோர நிலப்பரப்பு வேகமாக சரிந்து வருவதால், அங்கிருக்கும் பதினான்கு வீடுகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பேராபத்தில் உள்ள இந்த கட்டிடங்களை பாதுகாப்பான முறையில் இடிக்க உள்ளூர் சபை திட்டமிட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ஐரோப்பாவிலேயே மிக வேகமாகச் சிதையும் கடற்கரையாக இது மாறியுள்ளதால், அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் துயரமான சூழலை எதிர்கொள்கின்றனர்.
இதேவேளை, பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வரும் அதிகாரிகள், கடற்கரைப் பகுதிக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கென சில கடற்கரை பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
















