பிரித்தானியாவில் வேகமாக வளர்ந்து வரும் ‘நிழல் வங்கி’ (Shadow Banking) துறையினால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்களைக் கையாள்வதில் நிதியமைச்சு போதிய அக்கறை காட்டவில்லை எனப் பிரபுக்கள் சபை (House of Lords) குற்றம் சாட்டியுள்ளது.
சுமார் 16 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த நிழல் வங்கித் துறையானது, பாரம்பரிய வங்கிகளுக்கு அப்பால் இயங்கும் தனியார் கடன் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைப்புகளை உள்ளடக்கியது.
இது போன்ற கட்டுப்பாடற்ற நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையைக் குலைக்கக்கூடும் என பிரபுக்கள் சபையின் நிதி ஒழுங்குமுறை குழு எச்சரித்துள்ளது.
குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய நிதி நெருக்கடியைப் போன்ற ஒரு சூழல் மீண்டும் உருவாகக்கூடும் என எச்சரித்துள்ள இக்குழு, அமெரிக்காவிலிருந்து பரவக்கூடிய பொருளாதாரத் தாக்கங்களால் பிரித்தானியா முதலாவதாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிதியமைச்சு, நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க வலுவான கட்டமைப்பு தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
















