2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) தொடரானது இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.
நவி மும்பையில் ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு மகளிர் பிரீமியர் லீக் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 2024 வெற்றியாளர்களான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI), ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), டெல்லி கேபிடல்ஸ் (DC), குஜராத் ஜெயண்ட்ஸ் (GG) மற்றும் UP வாரியர்ஸ் (UPW) ஆகிய ஐந்து WPL அணிகள் 22 போட்டிகளில் விளையாடும்.
ஜனவரி 9 முதல் 17 வரை சீசனின் முதல் 11 போட்டிகள் நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடைபெறும்.
அதன் பின்னர் 2026 WPL இறுதிப் போட்டி உட்பட மீதமுள்ள 11 போட்டிகள் வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெறும்.
கடந்த மூன்று சீசன்களைப் போலவே சீசனின் லீக் கட்டத்தில் அனைத்து அணிகளும் ஒருவருக்கொருவர் இரண்டு முறை மோதும்.
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி பெப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.
அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் பெப்ரவரி 3 ஆம் திகதி நடைபெறும் எலிமினேட்டரில் இறுதிப் போட்டியில் இடம்பெறும்.
WPL 2026 சீசனில் பெரும்பாலான போட்டிகள் மாலையில் நடைபெறும்.
இந்திய டி20 அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி 2023 இல் தொடக்க WPL பட்டத்தை வென்றது.
2024 இல் ஸ்மிருதி மந்தனா பெங்களூரவை வழி நடத்திய சாம்பியன் பட்டம் பெறச் செய்தார்.
இதற்கிடையில், மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பிடித்த DC மற்றும் UPW அணிகள் புதிய தலைமைத்துவ அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளன.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மெக் லானிங் ஆகியோர் முறைேயை இரு அணிகளுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


















