போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலக்கட்டத்தில் மொத்தம் 888 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான நபர்களில் எட்டு சந்தேக நபர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளன.
மேலதிகமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 09 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
















