அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஒரு நல்ல உரையாடலை நடத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிவொன்றை வெளியிட்டு கூறியுள்ளார்.
மேலும், வர்த்தகம், முக்கிய கனிமங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி குறித்து விவாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை மற்றும் பிற பிரச்னைகள் குறித்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா- இந்தியா இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் அடுத்த மாதம் நடைபெறக்கூடிய சந்திப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,












