தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
பொலிஸ் நிலைய இந்து உத்தியோகத்தர் மற்றும் ஏனைய சமயங்களைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் பங்குகொண்டிருந்த இந்த நிகழ்வு கல்முனை ரோயல் விளையாட்டு கழக அனுசரனணயுடன் தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பொலிஸ் உயரதிகாரிகள் கல்முனை ரோயல் விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளில் பொலிசார் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள உத்தியோகத்தர்களிடையெ பரஸ்பரம்,சகோதரத்துவம்,நல்லி
உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்,மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமிஇ சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல்படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.
















