“ஒற்றுமையை விதைப்போம் – நாட்டிற்கு அறுவடை செய்வோம்” என்ற கருப்பொருளில் தேசிய இளைஞர் சேவை மன்றமும், இலங்கை இளைஞர் சங்க கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா
இன்று நுவரெலியா – ஹட்டன் நகரில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம் பெற்றது
ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் காலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெற்றன .
இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திலிந்து சமன் என்நாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி , தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் / இலங்கையின் இளைஞர் அலுவல்கள் தொடர்பான பொது இயக்குநர் வழக்கறிஞர் சுபுன் விஜேரத்னவும் கலந்து கொண்டார்
அத்துடன் இன்று மாலை 6.30 மணிக்கு ஹட்டன் பேருந்து நிலைய வளாகத்தில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இசைக் குழுவும் நடனக் குழுவும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.















