சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாடு முழுவதும் சுகாதார மையங்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மகா தேரருக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்த திட்டத்தின் வெற்றி, தொற்றா நோய்களைத் தடுக்கவும், மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மருத்துவமனைகளின் புனரமைப்பு வெளிநாட்டு உதவி மற்றும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி தொடங்கப்பட்டுள்ளதாகவும், கண்டியில் சேதமடைந்த வத்தேகம மருத்துவமனையை வேறொரு இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கண்டி தேசிய மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளின் தற்போதைய நிலை,
எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் புதிய இருதய மருத்துவமனை கட்டுமானம், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 62 மருத்துவமனைத் திட்டங்களை மீண்டும் தொடங்குதல், தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையை புதிய இடத்தில் நிறுவுதல் மற்றும் தித்வா சூறாவளியால் சேதமடைந்த மருத்துவமனைகளை புனரமைத்தல் குறித்தும் அமைச்சர் விளக்கியுள்ளார்.














