யாழ் பொது போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT Scan இயந்திரம் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் பரிசோதனைச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இயந்திரம் பழுதடைந்திருந்த காலப்பகுதியில் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியமை பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலை நிர்வாகம், இனி இடையூறுகள் இன்றி CT Scan பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.












