இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு தூக்கினால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்ததுடன் காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த ரவிந்திரன் மிதுசன் என்பவர் ஆவார்.காதல் விவகாரம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

















