யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குடத்தனை பகுதியில் இன்றைய தினம் காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் , மற்றைய மோட்டார் சைக்கிளில் ஓட்டியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைந்த நிலையில் , அங்கிருந்து மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்















