வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள நகைகடையொன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தங்க நகை கடைக்கு வருகை தந்த நபர் பல தங்க மாலைகளை பார்வையிட்டதாகவும் , அதனை தொடர்ந்து இரண்டு லட்சத்து எண்பத்தொன்பதாயிரம் ரூபா பெறுமதியான நகையொன்றினை தெரிவு செய்து அதற்கான பற்றுச்சீட்டினை எழுதி பெற்றுக்கொடுக்க முற்படும் போது தங்கை நகையை எடுத்துகொண்டு ஓடிய காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பாதிவாகியுள்ளதாகவும் அச் சம்பவத்தின் போது கடை உரிமையாளர் வெளியில் சென்றுள்ளதாகவும் கடையில் பணி புரியும் இரண்டு பெண்கள் மாத்திரம் இருந்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து சிசிடிவி காணொளி ஊடாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



















